தமிழ் சினிமாக்களை விமர்சித்து திரையுலகத்தின் வெறுப்பை சம்பாதித்தவர் புளூ சட்டை மாறன் .
இளமாறன் என்பது இவரது இயர் பெயர். இவர் சொந்தமாக இயக்கிய ஆன்டி இந்தியன் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. எனினும், அடுத்தவர்கள் படத்தை எப்போதும் விமர்சித்து படங்களின் வசூலுக்கு வேட்டு வைத்து விடுகிறார் புளூ சட்டை மாறன் என்று சினிமா பிரபலங்கள் புலம்புவது உண்டு.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான மார்க்கோ மலையாள படத்தையும் மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். உன்னி முகுந்தன் நடித்த இந்த படத்தை கொரியன்
பட டப்பிங் என்றும் எதிர்பார்த்த அளவுக்கு வொர்த் இல்லை. காகித புலி என்றும் புளு சட்டை சாடியிருந்தார்.
மேலும், ‘பான் இந்தியா படமாக எடுத்து வெளியிட்டுருக்காங்க. மலையாளத்தில் செம ஆக்க்ஷன் படமா எடுத்துருக்காங்க அப்படினு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுட்டாங்க.
ஆனால், போய் பார்த்தா, இந்த படத்தை எடுத்தவரு அந்த ஊரு அட்லீ போல இருக்குது. கொரியன் ஆக்ஷன் படங்களை சுட்டு எடுத்து வச்சுருக்காங்க. ஆர்டிவிஷியல் ரத்தம் 4 லாரி, ஃபாரின் காரு 10 கார் வாடகைக்கு எடுத்து அதை படத்துல காட்டுறதையே வேலையா வச்சுருக்காங்க.
படத்துல வருற எல்லோரும் சுருட்டு பிடிச்சுட்டே இருக்காங்க. சுருட்டு பிடிக்கிறதுக்காகவே இப்படி ஒரு படத்தை எடுத்துருக்காங்க. உலகம் முழுக்க ஆக்ஷன் படங்கள் எடுக்குறாங்க. இந்த படத்தை பார்க்கும் போது, எந்த ஒரு திக்கு திக்கும் இல்லை. சும்மா கூவி விட்டுட்டாங்க.
காலங் காத்ததாலயே உள்ளே போய் பார்த்தா உடம்பு ரண களமாகி போச்சு’ என்று மார்கோ படத்தை மாறன் கடுமையாக குறை கூறியிருந்தார்
இதையடுத்து, மலையாளிகள் பலரும் அவருக்கு கமெண்ட் வழியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அங்கிள் என்று குறிப்பிட்டு இவர் அனைவராலும் வெறுக்கப்படுபவர். அங்கிள் போய் கங்குவாவை பாருங்கள், அங்கிளுக்கு 90s படங்கள்மட்டும்தான் பிடிக்கும் என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
ஆனால், சில மலையாளிகள் விமர்சித்தவர்களுக்கு பதிலாக தாங்கள் மன்னிப்பு கேட்பதாகவும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.
–எம்.குமரேசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்… வரலாறு காணாத வீழ்ச்சி!
மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
நடிகர் சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீர்ப்பை … எதில் இருந்து தயாரிக்கப்பட்டது?
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… எடப்பாடி கண்டனம்!
150 வயசு வரை வாழ்றாரோ இல்லையோ 150வது படத்தில் நடித்த சரத்குமார்