நடிகை த்ரிஷா விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 23) மனு தாக்கல் செய்துள்ளார். mansoor alikhan bail petition
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் லியோ படத்தில் இணைந்து நடிக்காதது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், சின்மயி, சிரஞ்சீவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது. குறிப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம்,
”மன்சூர் அலிகான், தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கோரும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது” என்றும் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான்,
“த்ரிஷா குறித்து நான் எதுவும் தவறாக பேசவில்லை. நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம் தருகிறேன். என்னை தொடர்பு கொண்டு பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்ற போலீசார் அவர் இல்லாததால் அவரது மனைவியிடம் சம்மனை கொடுத்தனர். mansoor alikhan bail petition
இதனால் மன்சூர் அலிகான் எங்கே என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து “மன்சூர் அலிகான் தலைமறைவு!” என்ற தலைப்பில் நேற்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா