பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபல டிக்டாக் புகழ் ஜி.பி முத்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவருக்கு பதில் வேறு ஒருவரை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க பிக்பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது ஆறாவது சீசனை எட்டியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் 21 வது போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார்.
இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது பிக்பாஸ்.
மக்கள் மத்தியில் முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வரவேற்பை பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சமூக வலைதளங்களில் ஜி.பி முத்து என்ற பெயரில் ஆர்மியும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் இறுதிவரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி முத்து 2 வாரங்களிலேயே வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.
தனது மகனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை எனக்கூறி நேற்று (அக்டோபர் 22 ) பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஜிபி முத்து.
அவரின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை கண்கலங்க வைத்தது. ஹவுஸ்மேட்ஸுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
ஜிபி முத்து வெளியே சென்றதால் அவருக்கு பதில் வேறு ஒருவரை வைல்டு கார்டு போட்டியாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகானுடன் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அவர் உள்ளே செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மன்சூர் அலிகான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ் படங்கள்!
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து!
bookmarked!!, I like your web site!