mansoor ali khan ncw notice dgp

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை: மகளிர் ஆணையம் பரிந்துரை!

சினிமா

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. mansoor ali khan ncw notice dgp

லியோ படத்தில் நடித்தது பற்றி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசி இருந்த மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து மிகவும் மோசமான, கேட்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையிலான கருத்துக்களைக் கூறியிருந்தார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இது குறித்து திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவிட்டு இருந்தார்.

mansoor ali khan ncw notice dgp

அந்தப் பதிவில் அவர், ” மன்சூர் அலிகான் போன்ற நபர்களால் மனித குலத்திற்கே அவப்பெயர். இவருடன் சேர்ந்து இனி நடிக்க மாட்டேன்” எனக் கூறியிருந்தார். நடிகை திரிஷாவை தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விளக்கம் அளித்துள்ள மன்சூர் அலிகான், “என் படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் நான் வர்ற தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பாக போட்டியிடுறேன்னு சொன்ன வேலையில் வேண்டுமென்றே நான் பேசிய வீடியோவை கட் பண்ணி போட்டு கலகம் பண்ணிட்டாங்க. நான் த்ரிஷாவை குறித்து உயர்வா தான் பேசி இருப்பேன். இந்த கலகத்துக்கெல்லாம் நான் அஞ்சறவன் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் மன்சூர் அலிகானிற்கு கண்டனங்கள் வலுத்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள குஷ்பூ தனது எக்ஸ் தளத்தில் , “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் குறித்து நான் ஏற்கனவே ஆணையத்தின் மூத்த உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளேன். அவர் மீது மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். இது போன்ற இழிவான சிந்தனையுடன் உள்ள யாரும் தப்பிக்க முடியாது. இந்த நேரத்தில் மன்சூர் அலிகான் இழிவாக பேசிய திரிஷா மற்றும் மற்ற பெண்களுடன் ஆதரவாக நான் நிற்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

mansoor ali khan ncw notice dgp

இந்தநிலையில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகை த்ரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் படி மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு பரிந்துரை செய்கிறோம். இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது, இது கண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. mansoor ali khan ncw notice dgp

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம், கலாக்ஷேத்திர மாணவிகள் போராட்டம், மணிப்பூர் விவகாரம் என எதற்குமே வாய் திறக்காத மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ இதற்காவது பேசியுள்ளாரே என்று நெட்டிசன்கள்  கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

சண்முகப் பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

Bigg Boss 7 Day 49: கைதட்டல் கேட்டு புலம்பிய பூர்ணிமா

ரஜினிக்கு கதை சொன்ன கெளதம் வாசுதேவ் மேனன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *