குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் இன்று (நவம்பர் 26) தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
த்ரிஷா குறித்து சர்ச்சையாக பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். “தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தெய்வீகம்” என்று மன்சூர் அலிகானுக்கு த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில், தாம் பேசியதை மடைமாற்றி வெளியிட்ட குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ணுவது, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்.
11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய ‘உண்மை வீடியோவை’ தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவை தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, திரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது. மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடி: அன்புமணி வலியுறுத்தல்!
ஓட்டுநா், நடத்துநா்கள் தோ்வு முடிவுகள் எப்போது வெளியீடு?