இந்த வாரம் தமிழ், மலையாளம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் உருவான படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஓடிடி-யில் வெளியாகியிருக்கின்றன. வாருங்கள், அவை எனென்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆகஸ்ட் 15:
மனோரதங்கள் (ZEE5)
எம்.டி.வாசுதேவன் நாயரின் ஒன்பது சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான ஆந்தாலாஜி மனோரதங்கள்.
பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், மகேஷ் நாராயணன், அஸ்வதி நாயர் ஆகியோர் இந்த ஆந்தாலாஜியை இயக்கியுள்ளனர்.
கதைசொல்லியாக கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்த ஆந்தாலாஜியில் மலையாள திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களான, மோகன்லால், மம்மூட்டி ஃபஹத் ஃபாசில், பார்வதி, அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளார்கள்.
ஆகஸ்ட் 16
மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் (டிஸ்னி ஹாட்ஸ்டார்)
சத்யராஜ், சீதா, ரேஷ்மா பசுபுலெட்டி, லிவிங்ஸ்டன் போன்றவர்கள் நடித்துள்ள இந்த வெப் சீரிஸை மறைந்த இயக்குநர் தாமிரா இயக்கியிருக்கிறார்.
வித்யாசாகர் இந்த வெப் சீரிஸுக்கு இசையமைத்துள்ளார், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தெ யூனியன் (நெட்ஃபிளிக்ஸ்)
மார்க் வாஹ்ல்பெர்க், ஹேல் பெர்ரி, ஜேகே சிம்மொன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் படத்தை ஜூலியன் ஃபாரினோ இயக்கியிருக்கிறார்.
முன்னால் காதலியின் வருகையால், நாயகனின் உயிருக்கு வரும் ஆபத்துதான் இந்த படத்தின் கதைச்சுருக்கம்.
தெ ரெக்வின் ( லயன்ஸகேட் பிளே)
புதிதாகக் திருமணம் ஆன ஜோடி ஒன்று, வியட்நாமிற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாகக் கனமழை வந்து அவர்களைச் சுறா மீன்கள் இருக்கும் கடலுக்குள் தள்ளிவிடுகிறது.
அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பது தான் கதைச்சுருக்கம்.
சமக்: தெ கன்க்லூஷன் (சோனி லிவ்)
இந்த தொடர் 2023-இல் வெளிவந்த சமக் தொடரின் இரண்டாவது சீஸன். பரம்வீர் சிங், மனோஜ் பஹ்வா, மோஹித் மாலிக் போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அமெரிக்கா சென்றாலும் கவனித்துக்கொண்டே இருப்பேன்: மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் மெசேஜ்!
Share Market : வாரத்தின் கடைசி நாள்… ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது என்ன? – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!