இயக்குநரும் நடிகருமான மனோ பாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று (மே 3 ) காலமானார்.
தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மனோ பாலா. கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோ பாலா இன்று காலமானார்.
அவரது மறைவு தமிழ் சினிமா திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாக மனோ பாலா நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து தான் நலமுடன் இருப்பதாக மனோ பாலா வேஸ்ட் பேப்பர் என்ற அவரது யூடியுப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், “சிறிது நாட்களுக்கு முன்பாக எனக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வந்த புகைப்படத்தை எனது நண்பர் ஒருவர் அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
அந்த புகைப்படத்தை பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இதனால் திரையுலகினர் பலரும் என்னை தொடர்புகொண்டனர். இப்போது நான் நலமுடன் இருக்கிறேன்.

எனக்கு எந்த கேடும் இல்லை. வாகனம் பழுதாகும் போது சில டிங்கரிங் பெயிண்டிங் செய்ய வேண்டும். அது போல தான் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.
என்னை நலம் விசாரித்த திரையுலகினர், ரசிகர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
மரணத்தை கூட நகைச்சுவையாக பார்த்த மனோ பாலாவின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
செல்வம்
இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவார்களா?: அமித்ஷா சொன்ன பதில்!
பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி மேலும் ஒரு வழக்குப் பதிவு!