மனோ பாலா மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான மனோ பாலா 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மனோ பாலா இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனோ பாலா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்