சினிமா விமர்சகர் பிஸ்மி, சீனு ராமசாமி அவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் அதனால்தான் அந்த படத்தில் இருந்து மனிஷா யாதவ் விலகிவிட்டார் என்றும் தெரிவித்தார். பிஸ்மியின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில நாட்களுக்கு முன்பு சினிமா விமர்சகர் பிஸ்மி, சீனு ராமசாமியின் படங்கள் குறித்து விமர்சித்திருந்தார். அவரது விமர்சனத்தை கண்டு கடுப்பான சீனு ராமசாமி மிக கோபமாக பதிலடி கொடுத்தார்.
அந்த மோதல் காரணமாகத்தான் விமர்சகர் பிஸ்மி, சீனு ராமசாமி மீது பாலியல் குற்றம் சாட்டுவதாக சிலர் கூறினார்கள். ஆனால் விமர்சகர் பிஸ்மி, சீனு ராமசாமி அந்த ஹீரோயினுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறினார்.
பிஸ்மியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னால் தான் சினிமாவை விட்டு மனிஷா யாதவ் விலகினாரா? ’ஒரு குப்பைக் கதை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனிஷா யாதவ் எனக்கு நன்றி சொல்கிறார் பாருங்கள் என்று ஒரு வீடியோவை சீனு ராமசாமி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சீனு ராமசாமியின் பதிவிற்கு மனிஷா யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,
”ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி தெரிவித்தேன்.
மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. என்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதுமே இணைந்து பணியாற்ற மாட்டேன்.
சீனு ராமசாமி சார் நீங்கள் கூறுவது தவறு” என்று மனிஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
மனிஷா யாதவ் கருத்து தற்போது சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
திமுக மாசெக்கள் கூட்டத்தில் உதயநிதி: காரணம் என்ன?
மன்சூர் அலிகான் முன் ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!