நடிகர் கமல் ஹாசன் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்து கூறியுள்ளார்.
சங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் நடிப்பில் உருவாகி உள்ள படம் “இந்தியன் – 2”. இந்த படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக உள்ளது.
இந்தியில் இந்தப் படம் “இந்துஸ்தானி 2” என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் முதல் பாகம் ஊழல் குறித்து பேசும் படமாக இருந்தது. அந்த படத்தில் கமல் நடித்த சந்துரு கதாபாத்திரத்திற்கு மனிஷா கொய்ராலா ஜோடியாக நடித்திருந்தார்.
இந்தியன் 2ஆம் பாகத்திலும் மனிஷா கொய்ராலா நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை. ஆனால், படப்பிடிப்பின்போது இயக்குநர் சங்கரை சந்தித்து மனிஷா கொய்ராலா பேசிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
இதனால், மனிஷா கொய்ராலா “இந்தியன் 2” படத்தில் நடித்திருக்கக்கூடும் என்ற பேச்சு எழுந்ததோடு, அந்த புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில், மும்பையில் மனிஷா கொய்ராலா நடிகர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து, “சிறந்த நடிகரும், அறிவுக்கூர்மை கொண்டவருமான கமல் சாருடன் இந்தியன் முதல் பாகத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது என்பது எனக்கு மகிழ்ச்சியான விசயம்.
இருவரும் இந்தியன் முதல் பாகத்தில் ஜோடியாக நடித்திருந்தோம். புத்தகமும், திரைப்படமும்தான் கமலின் உலகம். மனதையும், ஆன்மாவையும் சீர்படுத்தும் சிறந்த புத்தகங்களை அவர் எனக்கு பரிந்துரை செய்தார்.
எப்போது சந்தித்தாலும் நான் அவரைப் பார்த்து வியந்து கொண்டேதான் இருக்கிறேன். நீண்ட நேரம் சினிமா, புத்தகங்கள் பற்றி அவருடன் உரையாடியதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த சந்திப்பிற்கு மிகுந்த நன்றிகள் கமல் சார்” என மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நான்கு நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை : இன்றைய நிலவரம் என்ன?
விரக்தியில் குழந்தைப்போல் தேம்பி அழுத ரொனால்டோ: வீடியோ வைரல்!