கவிஞர் வைரமுத்துவை விட தமிழ் சினிமாவில் திறமையான புதிய பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கவிஞர் வைரமுத்து இருவரும், திரைத்துறையில் 30 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளங்கோ கிருஷ்ணன், வெண்பா, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்திலிருந்து, மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும் வைரமுத்து பாடல்கள் எழுதி வந்தார்.
முதல்முறையாக, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், வைரமுத்து பாடல் எழுதவில்லை.

இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து குறித்து குறிப்பிடும்போது, அவரை விட திறமையான பாடலாசிரியர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
வைரமுத்துவை ஏன் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் மணிரத்னம், “தமிழ் மொழி பன்னெடுங்காலமாக உள்ளது. தமிழ் சினிமாவில், நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள், திறமையான புதுமுக இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வருகிறார்கள்.

அதனைப் போல, தமிழ் மொழியில் நிறைய வளம் இருக்கிறது. நான் வைரமுத்து சாருடன் நிறைய படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அவருடைய நிறைய கவிதைகளை நானும் ரகுமான் சாரும் இணைந்து பாடலாக்கியுள்ளோம்.
அவர் ஒரு அற்புதமான கவிஞர். ஆனால், அவரை விட புதிய திறமையான பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களை தங்களது வெற்றிக் கூட்டணி இசையால் கட்டிப்போட்ட மணிரத்னம், வைரமுத்து நட்பு முறிந்தது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செல்வம்
வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் எடுப்போம்: ஜெயமோகன்
அமித்ஷாவுடன் பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி பேட்டி!
Seithiyil tharam illai