மணிகண்டன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லவ்வர்’ படத்தின் சென்சார் சர்டிபிகேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
மணிகண்டன், கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘லவ்வர்’. வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
#Lover Muted Words 👀😲 pic.twitter.com/eqto5dVOQO
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 4, 2024
சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ‘லவ்வர்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி தணிக்கைக்குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 26 நிமிடங்கள்.
படத்தில் இடம்பெற்ற 18 கெட்ட வார்த்தைகளுக்கு தணிக்கைக்குழு கத்தரி போட்டுள்ளது. அந்த வார்த்தைகள் வரும் இடத்தில் மியூட் போட்டுக்கொள்ளுமாறு படக்குழுவிற்கு அறிவுறுத்தி இருக்கிறது.
தற்போது இந்த சென்சார் சர்டிபிகேட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”இத்தனை கெட்ட வார்த்தைகளா”, என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர் உரை, பட்ஜெட்: ஸ்பெயினில் இருந்து முதல்வர் ஆய்வு!
Video: ”ரொம்ப தப்புங்க” ஸ்டோக்ஸின் செய்கையால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!