இனி ‘லவ்வர்’ மணிகண்டன்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சினிமா

ஜெய் பீம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர் நடிகர் மணிகண்டன். சமீபத்தில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான “குட் நைட்” படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்திற்கு பிறகு தற்போது பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் “லவ்வர்” என்று பெயரிடப்பட்டுள்ள ஓர் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று ( நவம்பர் 30) லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு லவ்வர் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது லவ்வர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

EXIT POLL 2023: ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கிறது!

சத்தீஸ்கர் எக்ஸிட் போல்: ஆட்சியை தக்க வைக்கிறது காங்கிரஸ்!

 

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *