சேர்ந்து சுத்தும் போதெல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியல?… வெளுக்கும் ரசிகர்கள்!

சினிமா

சமூக வலைதளங்கள் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மணி சந்திரா – ரவீனா குறித்த பேச்சாகவே உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ப்ரீஸ் டாஸ்க் மூலம் உறவினர்கள் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால்  போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால் மணி சந்திரா மட்டும் மிகுந்த சோகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஏனெனில் நேற்று (டிசம்பர் 21) வீட்டுக்குள் வந்த ரவீனாவின் உறவினர் மணியை வைத்து செய்து விட்டார்.

ஆரம்பம் முதலே மணியின் நிழலில் தான் ரவீனா விளையாடி வருகிறார். ஆனால் நேற்று வந்த ரவீனா உறவினர், ”நீ தனியாக ஆட வேண்டும். உன்ன சாவு, குண்டுப்பையா எல்லாம் சொல்றதுக்கு அவன் யாரு.

நீதான் அவருக்காக நிக்கற. அவர் நிக்கல. பணம் விவகாரத்துல நானும் காரணம்ன்னு அவர் சொல்லியிருக்கணும். திருப்பித் தந்திருக்கணும்.

ஆனா அவர் செய்யல ஏன்? உனக்கு பயமா இருக்கா? ஏதாவது சொல்லிடுவாருன்னு. பொய் சொன்னா அறைஞ்சுடுவேன்” என்றெல்லாம் நீட்டி முழக்கி கொண்டிருந்தார்.

கடைசியில் அவர் மணியையும் சேர்த்து பஞ்சாயத்து செய்தது தான் கொடுமை. மணி வந்ததும் அவரிடமும், ”அவளுக்கு நாங்க இருக்கோம். பார்த்துக்கறதுக்கு நீங்க யாரு. அவ கேமை ஆட விடுங்க.

தனியா ஆடற தகுதியும் துணிச்சலும் அவளுக்கு இருக்கு. அம்மாவை கன்வின்ஸ் பண்ணிட்டேன். அடையறதுக்குன்னு சொல்றீங்க. எதை அடையறதுக்கு?” என்றெல்லாம் சரமாரியாக கேள்விகள் எழுப்பி அவரை தாக்கினார்.

மணி இந்த விஷயத்தை பெருந்தன்மையாக ஹேண்டில் செய்தாலும் கூட, அவர் தான் ரவீனா இந்த கேமை ஒழுங்காக ஆடாததற்கு காரணம் என ரவீனா உறவினர் கண்டபடி பேசினார்.

கடைசியில் பிக்பாஸ், ரவீனா உறவினரை ஏதோ ஒரு சீக்ரெட் சொல்லி விட்டார் எனக்கூறி வலுக்கட்டாயமாக அவரை வெளியே அனுப்பினார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ரசிகர்கள் பலரும் மணி, ரவீனா இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர்.வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது எல்லாம் ரவீனா உறவினருக்கு இந்த விஷயம்  தெரியாதா? மணி இல்லை என்றால் ரவீனா ஒரு சில வாரங்களிலேயே வெளியேறி இருப்பார். ஆனால் மொத்த பழியையும் தூக்கி மணி மேல் போட்டு விட்டனர்” என தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சரவண விக்ரம், ரவீனா, விசித்ரா மூவரும் இடம் பெற்றுள்ளனர். விசித்ராவுக்கு வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதால் வெளியேறப்போவது ரவீனாவா? இல்லை விக்ரமா? என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் யார்? என்பதை வழக்கம்போல நாம் காத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

இடுகாடுகளை சூழ்ந்த வெள்ளம்… நடமாடும் எரிவாயு வாகனத்தில் உடல் தகனம்!

வெள்ள பாதிப்பு- தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது : நிர்மலா சீதாராமன்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *