2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வுகுழுவில் இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக சேர்வதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான உறுப்பினர்கள் தேர்வு பட்டியல் ஆஸ்கர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உறுப்பினர் தேர்வு என்பது தொழில்முறை தகுதி, பிரதிநிதித்துவம், பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு பட்டியலில் மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் நடிகர்கள் வரிசையில், ராம் சரண், ஜூனியர் என்.டி ராமா ராவ் உட்பட 29 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குநர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் இருந்து இயக்குநர் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசை பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணி இடம் பெற்றுள்ளார்.
உறுப்பினர்கள் தேர்வு குறித்து ஆஸ்கர் அகாடமி சிஇஓ பில் க்ராமர், இந்த கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை எங்கள் உறுப்பினராக வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருந்து ஏ.ஆர்.ரகுமான், சூர்யா உள்ளிட்டோர் ஆஸ்கர் குழுவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
“கருணாநிதியின் குடும்பம் தமிழ்நாடு தான்” – மோடிக்கு ஸ்டாலின் பதில்!
மாமன்னன் ரிலீஸ்: திரையரங்க உரிமையாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் நெருக்கடி!