rashmika mandanna deepfake video

ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ… முக்கிய குற்றவாளி கைது!

சினிமா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ தொடர்பாக முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep Fake வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அது உண்மையான வீடியோ என்று நினைத்து ஷேர் செய்தனர்.

அது ராஷ்மிகாவின் போலி வீடியோ என்று கண்டறிந்த போது சுமார் 15 மில்லியனுக்கும் மேலான பேர் அதை பார்த்திருந்தனர்.

இதையடுத்து அது ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ்-இந்திய பெண்ணின் வீடியோ என்றும், AI Deep Fake தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதைப்பார்த்த இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த போலி வீடியோவை பகிர்ந்து இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னுடைய எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்தார்.

திரையுலகினர் பலரும் இந்த DeepFake வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்தனர். பொதுமக்களும் இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கி வெளியிடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.

என்றாலும் ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப், சாரா அலிகான் என பல்வேறு பிரபலங்களின் Deep Fake வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இதையடுத்து மத்திய தொலைத்தொடர்பு,மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நவம்பர் 23-ம் தேதி சமூக வலைதள நிறுவனங்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில்,”Deep Fake வீடியோக்கள் ஜனநாயகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனை சமாளிக்க விரைவில் புதிய சட்டங்களை அரசு கொண்டு வரும்.

Deep Fake வீடியோக்களை கண்டறிதல், அவை பரவுவதை தடுத்தல், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட முடிவுகளை உறுதியாக பின்பற்ற சமூக வலைதளங்களும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன.

Deep Fake முறையில் போலிகளை உருவாக்கும் படைப்பாளிகள்,அவை பகிரப்படும் தளங்கள் ஆகிய இரு தரப்புக்கும் அபராதம் விதிக்கப்படுவது குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம். Deep Fake போன்ற போலிகளுக்கு எதிராக ஒழுங்குமுறை (Regulations) தேவை என்பது தெளிவாக தெரிகிறது.

மீண்டும் சமூக வலைதள நிறுவனங்களுடன் இதுகுறித்த சந்திப்பை நடத்த உள்ளோம். Deep Fake வீடியோக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதில் விவாதிக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா வீடியோ தொடர்பாக முக்கிய குற்றவாளியை டெல்லி போலீசார் இன்று(ஜனவரி 20)கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து டெல்லி சைபர் கிரைம் மற்றும் உளவுத்துறையை சேர்ந்த டிசிபி ஹேமந்த் திவாரி, ” ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ தொடர்பாக ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த 24 வயது ஈமானி நவீன் என்பவரை கைது செய்துள்ளோம்.

அவரிடம் இருந்து லேப்டாப் மற்றும் மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட டேட்டாக்களையும் தற்போது கைப்பற்றி உள்ளோம்.

rashmika mandanna deepfake video

ராஷ்மிகா மந்தனாவிற்காக பேன் பேஜ் ஒன்றை நவீன் நடத்தி வந்துள்ளார். இதுதவிர மேலும் இரண்டு பிரபலங்களுக்கும் பேன் பேஜினை நடத்தி வந்துள்ளார்.

விரைவில் பாலோயர்ஸ் அதிகமாக வேண்டும் என்பதற்காக இந்த Deep Fake வீடியோவை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்,” என தெரிவித்தார்.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி

”நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்” Incognito மோடிற்கும் செக் வைத்த கூகுள்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *