காதல் படத்தில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்த மம்முட்டி, படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மம்முட்டி. அதேபோல் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஜோதிகா.
இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம்தான் “காதல் தி கோர்”.
முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜோ பேபி இந்த படத்தை இயக்குகிறார்.
வேஃபேரர் பிளிம்ஸ் மற்றும் மம்முட்டி கம்பெனி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, நடிகை ஜோதிகா பிறந்தநாள் சிறப்பாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் படக்குழுவினருக்கு உணவு பரிமாறிய புகைப்படங்களையும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “காதல் தி கோர் படத்தில் என்னுடைய பகுதி படப்பிடிப்பை நான் நிறைவு செய்துவிட்டேன். துடிப்பான குழுவுடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.
மம்முட்டியுடன் சேர்ந்து ஜோதிகாவும் படக்குழுவினருக்கு உணவு பரிமாறியுள்ளார்.
நடிகை ஜோதிகா தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், காதல் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜோ பேபி இயக்கத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
உலகக்கோப்பை கால்பந்து: 12 ஆயிரம் இணையதளங்களுக்கு தடை!
பிரியா மரணம்: மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம்!