பெரிய தொகைக்கு ஏலம் போன மம்மூட்டி எடுத்த புகைப்படம்!

சினிமா

மலையாள நடிகர் மம்மூட்டி எடுத்த புகைப்படம் ஒன்று பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. சமீபத்தில் இவர் நடித்த “பிரம்மயுகம்” படம் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

இதையடுத்து மம்மூட்டி நடித்த ‘டர்போ’ படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மற்றொரு மலையாள நட்சத்திர நடிகர் மோகன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கிய சைவாக் இந்த படத்தை இயக்கி இருந்தார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தான் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக ஊடகங்களில் மம்மூட்டி பகிர்ந்து வருகிறார்.

Mammootty's photo auctioned for a huge amount!

இந்நிலையில், இவர் எடுத்த புகைப்படம் ஒன்று மிகப்பெரிய தொகைக்கு தற்போது ஏலம் போய் உள்ளது. கொச்சியில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் நடிகர் மம்முட்டி எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படம் இடம்பெற்றது.

Mammootty's photo auctioned for a huge amount!

இந்த புகைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படத்தை தொழிலதிபர் அச்சு உல்லட்டில் ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை மையம்

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம்: மாநில கல்விக் கொள்கை பரிந்துரை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *