தீபாவளியை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி வெளியான திரைப்படங்களில் மலையாளத்தில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மம்மூட்டி, ஜோதிகா, சுதி கோழிக்கோடு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தன்பாலின உறவு குறித்து பேசும் இப்படத்தில் நடித்த அனைவரும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் தற்போது பாராட்டுகளை அள்ளி வருகின்றனர்.
இந்த நிலையில் காதல் தி கோர் படத்தைப் பார்த்துவிட்டு நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கொடுத்துள்ள ரிவ்யூ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதில் அவர், ”இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம். நீங்கள் உங்களுக்கே நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால், இந்தப் படத்தை போய் பாருங்கள். இதுவரை நான் பார்த்த படங்களில் காதல் தி கோர் ஒரு ரத்தினம்.
மம்முட்டி சார் நீங்கள் தான் என் ஹீரோ. உங்களது நடிப்பை என்னால் நீண்ட நாட்களுக்கு மறக்கவே முடியாது. ஜோதிகா ஐ லவ் யூ. ஜியோ பேபி நீங்கள் ஒரு மேதை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி என்றால் அடங்கியே இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனையின் குரூரத்தை உணர்த்தியது தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம்.
அதனைத்தொடர்ந்து ஜியோ பேபி இயக்கியுள்ள காதல்: தி கோர் சமூகத்திற்காக தனது குடும்பத்தை சகித்து கொண்டு வாழும் ஒரு தன்பாலினர் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீவிரமாக பேசியுள்ளது.
தி கிரேட் இண்டியன் கிச்சன் படம் போலவே தற்போது காதல்: தி கோர் படமும் சமூகவலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குஜராத்தா? மும்பையா? ஹர்திக் பாண்டியா நிலைமை இப்படி ஆகிடுச்சே!
டிஜிட்டல் திண்ணை: எம்.பி. வேட்பாளர் தேர்வு- மாசெக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி!