ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டி – ஜோதிகா நடித்துள்ள ‘காதல் தி கோர்’ மலையாள படம் நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தின் விளம்பர நிகழ்வு, டிரைலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மம்முட்டி பேசுகிறபோது,
“ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அந்தக் கருத்துகள் அவர்களது கருத்துகளாக இருக்க வேண்டும்” என்று விமர்சகர்களுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் அரபு நாடுகளில் படத்தை திரையிட அங்கு தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தணிக்கைக்கு விண்ணப்பித்தபோது காதல் தி கோர் படத்தின் திரைக்கதை உள்ளடக்கம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக சொல்லி, கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரண்டு நாடுகளிலும் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தடைகள் இந்தியப் படங்களுக்கு அவ்வப்போது நடக்கும். மலையாளிகள் அதிகமாக இருக்கும் அரபு நாடுகளில் மலையாள படங்களுக்கு கணிசமான வசூல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு நாடுகள் தவிர்த்து ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 23ம் தேதி இந்த படம் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து!