ஜெயம் ரவியின் “கோமாளி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “லவ் டுடே” படத்தின் மூலமாக ஹீரோவாகவும் அறிமுகமானார்.
லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி 2K கிட்ஸின் ஃபேவரைட் நாயகனாகவே மாறிவிட்டார்.
லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC – Love Insurance Corporation படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் டிராகன் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். லவ் டுடே படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் டிராகன் படத்தை தயாரித்து வருகிறது.
ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார் என்றும், அந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க போவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஒரு பிரபல மலையாள நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆன பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜூ பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான இறுதி கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட இந்த ப்ராஜெக்ட் உறுதியாகிவிட்டதாகவும்,
LIC மற்றும் டிராகன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரதீப் ரங்கநாதனின் இந்த புதிய படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணுபவர்களுக்கு பயிற்சி முதல் இந்தியன் 2 அப்டேட் வரை!
ஹெல்த் டிப்ஸ்: தலைவலிக்காக அடிக்கடி மாத்திரைகள் போடுபவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா : வெஜ் கோலா உருண்டை!
திராவிட இயக்கக் கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது: ஆளுநர் ரவி காட்டம்!