சிங்கத்துடன் ஷூட்டிங்… மிரட்டும் ’மாம்போ’ ஃபர்ஸ்ட் லுக்!

சினிமா

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ’மாம்போ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் திரைப்படம் என்றாலே நம் நினைவிற்கு வருவது காடும் , காடு சார்ந்த இடங்களும் தான். தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் காடுகளின் அழகியல், வாழ்வியல் போன்றவற்றைப் படத்தின் மிக முக்கிய பங்காக வைக்கத் தவற மாட்டார் இயக்குநர் பிரபு சாலமன். இந்த நிலையில், அவரது இயக்கத்தில் தயாராகும் அடுத்த திரைப்படமான ‘மாம்போ’ திரைப்படத்தின் அறிவிப்பு அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் ஒரு நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனராம். ஆக, இந்தப் படக்குழு வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ‘ஆசியாவில் முதல்முறையாக நிஜ சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட திரைப்படம்’ என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடிகர் விஜய்குமாரின் பேரனும், வனிதா விஜய்குமார் – ஆகாஷ் தம்பதியின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் பிரபு சாலமனின் மகனான சாமுவேல் சஞ்சய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் மிக பரபரப்பான தயாரிப்பு நிறுவனமான ‘ரோஜா கம்பைன்ஸ்’ இந்தப் படத்தின் மூலம் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு பின்பு தயாரிப்பில் அடியெடுத்து வைக்கிறது.

இந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் ’பேரரசு’, ‘பாட்டாளி’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘தேவதையைக் கண்டேன்’ போன்ற பிரபலமான திரைப்படங்களை தயாரித்துள்ளது.

படத்தில் நடிக்கும் ஏனைய கதாபாத்திரங்கள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நடிகர்கள் யோகி பாபு, தேஜஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் எனத் தெரிகிறது. பிரபு சாலமன் திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களைத் தந்த டி.இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு சிறுவனுக்கும் சிங்கத்திற்குமான நட்பைச் சொல்லும் திரைப்படமாக உருவாகும் இந்தப் படம் குறித்த ஏனைய தகவல்கள் வரும் காலங்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கனிம வளங்களுக்கு வரி: மாநில அரசுகளுக்கே அதிகாரம்… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பிரதீப் ரங்கநாதன் பட பெயர் மாற்றம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *