Mamannan who holds a world record

ஓடிடியில் உலக அளவில் சாதனை படைத்த மாமன்னன்!

சினிமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், லால், விஜயகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.

கடந்த ஜூன் 29 அன்று இந்தியா முழுவதும் 715 திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் அதிகமான விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியது.

இச்சூழலில் மாமன்னன் திரைப்படம்  80 கோடிக்கும் மேல் வசூல் சாதனையும்  செய்தது. மேலும் விமர்சன ரீதியாகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-ல் வெளியானது முதல் இந்தப்படத்தில் இடம் பெற்ற பகத் பாசில் நடித்த ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தை சுயசாதி பெருமை பேசுவது போன்ற பாடல்களுடன் எடிட் செய்து நெட்டிசன்கள் சிலர் கொண்டாடினர்.

இதனிடையே, இந்தப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங் நம்பர் ஒன் என்ற இடத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிடித்தது.

இந்நிலையில், மாமன்னன் திரைப்படம் நெட்பிளிக்ஸ்-ல் இது வரையில் 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும்,  உலக அளவில் ஒன்பதாவது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிராகரிப்பு: ஓ.பி.ஆர். எம்பி. பதவி இழப்பு!

“நீதிமன்ற நடவடிக்கைகளால் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை” – அமலாக்கத்துறை

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *