இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் இன்று (ஜூன் 17) யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மாமன்னன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த மாதம் 29 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தொடர்ச்சியாக படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
மாமன்னன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தொடங்கி டிரெய்லர் வரை ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பையே ஏற்படுத்தியுள்ளது.
டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று உலகளவில் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
குறிப்பாக இன்று மதியம் தான் டிரெய்லர் 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டிருந்தது. மதியம் 2 மணியில் இருந்து இரவு 8.30 மணிக்குள் கூடுதலாக 30 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது மாமன்னன் டிரெய்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
பணக்கார மாணவர்களுக்கே சாதகமான ’நீட்’: ஆய்வில் அம்பலம்!
விளையாட்டு துறை கேப்டன் உதயநிதி: ஸ்குவாஷ் நிறைவு விழாவில் ஸ்டாலின்