மத்திய அரசு சார்பில் ‘ஒரே பாரதம் – உன்னத பாரதம்’ இயக்கத்தின்கீழ், தமிழகத்துக்கும், காசிக்கும் உள்ள வரலாற்று தொடர்பை எடுத்துரைக்கும் தமிழ் சங்கமம் நவம்பர் 17ம் தேதி முதல் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
டிசம்பர் 16 வரை நடைபெறும் இந்த நிகழ்வில் மூன்று நேரடி தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

சிவாஜி கணேசன் நடிப்பில் சிவபெருமானின் பெருமைகளை பற்றி பேசும் திருவிளையாடல் படம்,

மகாபாரதத்தில் பிரதான கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ள கர்ணன் கேரக்டரை மட்டும் பின்புல திரைக்கதையாக்கி சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம்,

சமகால சமூகத்தையும், மனிதர்களின் வாழ்வியலையும் திரைப்படமாக்குபவர் என பாராட்டப்பட்டு வரும் இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் ஆகிய மூன்று படங்கள் திரையிடப்படுகின்றன.
“
இராமானுஜம்
கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை!
தீப்பெட்டி மூலப் பொருட்களின் ஜிஎஸ்டியை ரத்து செய்ய கனிமொழி கோரிக்கை!