இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் நடிகர் பாபி சிம்ஹா ஒரு கேங்ஸ்டர் ஆகவும், நடிகர் சித்தார்த் ஒரு இயக்குனராகவும் நடித்திருப்பார்கள். அதேபோல் ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கேங்ஸ்டர் ஆகவும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராகவும் நடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில், தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலிருந்து ‘மாமதுர’ வீடியோ சாங் இன்று (நவம்பர் 9) வெளியானது. இந்த பாடல் வீடியோவை பார்க்கும் போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜெகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற ‘ரகிட ரகிட’ பாடல் வைப்பில் உள்ளது.
Before the crackers in theatres tomorrow, here's a Diwali sweet from team #JigarthandaDoubleX ❤️#Maamadura Video song – https://t.co/K0bfmohoxd#DoubleXDiwali in theatres, from tomorrow. Book tickets now – https://t.co/98r5lNh5WO…@karthiksubbaraj @iam_SJSuryah @dop_tirru…
— Raghava Lawrence (@offl_Lawrence) November 9, 2023
ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இந்த இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
கோவிலுக்கு ஒரு நியாயம், கட்சிகளுக்கு ஒரு நியாயமா? பெரியார் சர்ச்சையில் அண்ணாமலை கேள்வி!
பிக்பாஸ்: இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்… உருகும் அம்மா!