Sangeeth Sivan passes away

பிரபல மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் மறைவு!

சினிமா

மலையாள சினிமா உலகின் பிரபல இயக்குநர்களில் முக்கியமானவர் சங்கீத் சிவன். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.

61 வயதான இயக்குநர் சங்கீத் சிவன் உடல்நிலை குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1990 ஆம் ஆண்டு “வியோஹம்” (Vyooham) என்ற மலையாளப் படத்தை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சங்கீத் சிவன் அடுத்ததாக 1992 ஆம் ஆண்டு மோகன்லால் வைத்து “யோதா” (Yodha) என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்.

மலையாளம் மட்டும் இன்றி ஹிந்தியில் பல வெற்றி படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

பாலிவுட்டில் இவரது இயக்கத்தில் வெளியான “கியா கூல் ஹை ஹம்”, “யாம்லா பக்லா தீவானா 2” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

கடைசியாக சங்கீத் சிவன் இயக்கத்தில் “Kapkapii” என்ற ஹிந்தி திரைப்படம் உருவானது. இது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன “Romancham” படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குநர் சங்கீத் சிவன் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: கோடையில் பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்

ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்?

கிச்சன் கீர்த்தனா : காளான் பெப்பர் மசாலா

வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *