இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள’ துருவ நட்சத்திரம்’ படம் பல பிரச்சனைகளால் வெளியாகாமல் உள்ளது.
சரி, இந்த படம் இப்படி ஆகிவிட்டது அடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தை கொண்டாட காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் வெளியாகும் என்று ‘தங்கலான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்தது.
ஆனால் ஏதோ காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதன் பிறகு ஏப்ரல் மாதம் ‘தங்கலான்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மீண்டும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது.
இப்படி தொடர்ந்து ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து வரும் விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, நடிகர் விக்ரமின் அடுத்த படமான ‘சியான் 62’ குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. ‘சித்தா’ பட இயக்குநர் எஸ்.யு.அருண்குமாரையும் அனைவரும் பாராட்டி இருந்தனர்.
தற்போது நடிகர் விக்ரமின் அடுத்த படமான’ சியான் 62′ படத்தை இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
அந்த வீடியோவில் நடிகர் விக்ரம் செம மாஸ் ஆக என்ட்ரி கொடுத்தது, “தூள்” பட ஆறுமுகம் கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்தது. இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகர் ஒருவரும்’சியான் 62′ படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் ‘டிரைவிங் லைசன்ஸ்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, சூரஜ் வெஞ்சாரமூடு தற்போது ‘சியான் 62’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சனாதன பேச்சு… உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!