பிரபல மலையாள நடிகை சவும்யா தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்ததாக கேரள அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு போலீஸ் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
நடிகை சவும்யா 1990 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 3 மலையாளம் மற்றும் ஒரு தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். தமிழ்படத்தில் நடித்த போது, டைரக்டர் ஒருவர் தன்னை மகளே என்று கூறி அழைப்பார். ஆனால், பல வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து என்டிடிவிக்கு சவும்யா பேட்டியளித்துள்ளார். அதில், ”எனக்கு 18 வயது இருக்கும் போது அந்த டைரக்டர் அறிமுகமானார். என்னை மகளை போல நினைத்ததாக கூறினார். நானும் நம்பி விட்டேன். கல்லூரி காலம் முழுவதும் என்னை அவர் பயன்படுத்தி கொண்டார். என்னை ஒரு பாலியல் அடிமை போல அவர் நடத்தினார். நான் அப்போது, சினிமா என்ற மாய உலகில் இருந்தேன். சிறு வயது என்பதால், அவரிடத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. என்னை மகளே என்று அழைத்து கொண்டு முத்தம் கொடுக்கும் போது, நான் உடைந்து போவேன். என் மனது நீ ஏதோ தவறு செய்கிறாய் என்று அப்போது சொன்னது. ஆனால், வெளியே சொல்ல வெட்கமாக இருந்ததால், அந்த சமயத்தில் அந்த டைரக்டர் பற்றி வெளியே சொல்லவில்லை.
என்னுடன் நடித்த நடிகர், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் பாலியல்ரீதியாக என்னை கொடுமைப்படுத்தினர். இது மாதிரியான மோசமான சம்பவங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதில் இருந்து மீண்டு வர 30 வருடங்கள் பிடித்தது. எனக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்த தமிழ் டைரக்டர் பற்றி கேரள அரசு அமைத்துள்ள சிறப்பு போலீஸ் குழுவிடம் கூறியுள்ளேன். என்னை போலவே பாதிக்கப்பட்ட பலரும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி முன் வந்து புகார் அளிக்க வேண்டும்” என சவும்யா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உடைந்து விழுந்த சிவாஜி சிலை… தள்ளிப் போகும் மகாராஷ்டிர தேர்தல் தேதி: பதற்றத்தில் மோடி…
கோட் படத்தில் ஒரு கார் வருது… அதுல ஒரு பேரு வருது!