ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பீஸ்ட் படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் நெல்சன். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி அப்டேட் கொடுத்தது ஜெயிலர் படக்குழு.
இதனைத் தொடர்ந்து எந்த அப்டேட்டுமே வெளியாகாமல் இருந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் கவுரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (ஜனவரி 8) ஒரு சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளது படக்குழு. அதன்படி, ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள போஸ்டரில் மூக்குக் கண்ணாடியுடன் மாஸான தோற்றத்தில் இருக்கிறார் நடிகர் மோகன்லால்.
இந்த அறிவிப்பைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இந்த செய்தியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா