நடிகை மாளவிகா மோகனன், ‘தங்கலான்’ படத்திற்காக தினமும் ஒரே இடத்தில் 4 முதல் 5 மணிநேரம் அமர்ந்து மேக்கப் போடும் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.
கதையின் நாயகனாக நடிகர் விக்ரமும் நாயகியாக பார்வதியும் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் உடன் மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தங்கலான் திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் காட்டுவாசி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இன்று தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் தங்கலான் படத்திற்காக தினமும் 4 முதல் 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டு வருவதாகவும், இது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அண்மையில், தங்கலான் திரைப்படத்திற்காக சிலம்பம் கற்றுக்கொள்ளும் வீடியோவை மாளவிகா மோகனன் வெளியிட்டிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இன்று(ஜூன் 21) அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களால் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு நெட்டிசன்கள் நீங்கள் படும் கஷ்டங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு பலன் கிடைக்கும் மாளவிகா என்பது போன்ற கருத்துக்களை கூறி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“பி.டி.ஆர் மனசு வைத்தால் ஸ்டாலின் குடும்பமே ஜெயிலுக்கு போவது உறுதி”-செல்லூர் கே.ராஜு
டாஸ்மாக் மூடுவிழா: எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை கடைகள்?