நடிகை நயன்தாரவை தான் விமர்சனம் செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ’கிறிஸ்டி’என்ற படத்தில் இவர் தற்போது நடித்து வருகிறார்.
இதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நயன்தாரா மீதுள்ள பொறாமையால் தான் அவர் இவ்வாறு பேசுகிறார் என்று நடிகை மாளவிகா மோகனனை நயன்தாரா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த மாளவிகா, நான் பெண் நடிகைகளை அவ்வாறு குறிப்பிடுவதைத் தான் பதிவு செய்திருந்தேன். நான் நயன்தாரா மீது மரியாதை வைத்திருக்கிறேன். ஒரு சீனியராக அவரது அசாத்தியமான பயணத்தை வியந்து பார்க்கிறேன். அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாராவின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் படம் ஒன்றில் மருத்துவமனை காட்சியில் மேக்கப் போட்டு நடித்ததை குறிப்பிட்டு, சாகும் நிலையில் இருக்கும்போது கூட இப்படி தான் மேக்கப் போட்டு இருப்பீர்களா என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ரஷ்ய – உக்ரைன் போரை மோடியால் நிறுத்த முடியும்: அமெரிக்கா
இது தான் திராவிட மாடல் அரசா? நாராயணன் திருப்பதி கேள்வி!
கார் மீது பேருந்து மோதி விபத்து!