malaikottai valiban teaser

மோகன் லாலின் புது அவதாரம்: ‘மலைக்கோட்டை வாலிபன்’ டீசர் இதோ!

சினிமா

ஜல்லிக்கட்டு படத்தின் மூலம் இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. ஒரு சாதாரணமான ஒன்லைன் கதையை எடுத்துக்கொண்டு அதற்கு மிக வித்தியாசமாக திரைக்கதை அமைத்து ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித சினிமா அனுபவத்தை தரக் கூடியவர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி.

கடைசியாக இவரது இயக்கத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

தற்போது லிஜோ இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் படம் மலைக்கோட்டை வாலிபன். தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். இயக்குநர் லிஜோ உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் பி.ஸ். ரபீக் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

மலைக்கோட்டை வாலிபன் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

“கண் கண்டதெல்லாம் நிஜம்… காணாதது பொய்… நீ கண்டதெல்லாம் பொய்…இனி காணப் போவதெல்லாம் நிஜம்..” என்ற வசனம் மோகன் லாலின் குரலில் ஒலிக்க ஒரு வித்தியாசமான தோற்றத்தில் மோகன் லால் அமர்ந்திருப்பது போன்ற காட்சி டீசரில் இடம் பெற்றுள்ளது.

மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் கமலஹாசனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

மழை வெள்ளம்: ஓஎம்ஆரில் மக்கள் சாலை மறியல்!

மழை வெள்ளம் : சென்னை வரும் ராஜ்நாத் சிங்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *