6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த தந்தை… அதிர்ச்சியில் உறைந்த மலைகா!

பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா இன்று காலை தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த தில்சே படத்தில் “தக்க தையா தையா” பாடலுக்கு ரயில் மீது ஏறி டான்ஸ் ஆடி அசத்தியவர்தான் மலைகா அரோரா. இவர், குடும்பத்தினருடன் மும்பையில் வசித்தார்.

இந்த நிலையில், மலைகா அரோரா மும்பையில் இருந்து புனேவுக்கு சென்றிருந்த நிலையில், அவரது தந்தை அனில் அரோரா 6வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே நோய் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டதால், இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக அனில் அரோரா குடும்பத்தினர் கூறுகின்றனர். தகவல் அறிந்ததும் புனேவில் இருந்து நடிகை மலைகா அரோரா மும்பைக்கு திரும்பியுள்ளார்.

அனில் அரோராவின் இறுதிச்சடங்கில்,  மலைகா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனில் அரோரா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். தாயார் ஜாய்ஸ் கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவர். இந்த தம்பதிக்கு மலைகா, அமிர்தா என இரு மகள்கள். இருவரும் சிறு குழந்தைகளாக இருந்த போதே,  தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று விட்டார். எனினும், கடைசிக் காலத்தில் மலைகா அரோரா தந்தையை தன்னுடன் வைத்து பார்த்துக் கொண்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு தந்தை அனில் அரோரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, தாய் ஜாய்சுடன் வந்து மலைகா அரோரா வந்து பார்த்து சென்றார். தொடர்ந்து, உடல் நலமில்லாத தந்தையை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார். இந்த நிலையில், அனில் அரோரா எடுத்த விபரீத முடிவு மலைகாவுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலை : மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

செப்டம்பர் 11 தாக்குதல்: சாகும் தருவாயில் எடுக்கப்பட்ட படம்… வைரலாக காரணம்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts