நான்காவது முறையாக கால் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியும், நடிகையுமான டிடிக்கு, பிரபலங்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் விஜயின் லியோ இசை வெளியீட்டு விழாவை டிடி தொகுத்து வழங்கினார்.
அதன்பின்னர் கால் மூட்டு வலி பிரச்சனை காரணமாக நீண்ட நேரம் நின்று கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்.
தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 4வது முறையாக மீண்டும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடும் வலியுடன் தான் எதிர்கொண்ட அறுவை சிகிச்சை அனுபவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக விவரித்துள்ளார் டிடி.
அதில், “கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு நான் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இது எனது 4வது அறுவை சிகிச்சை. எனது வலது முழங்காலுக்கு இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன்.
இது மிகவும் வேதனையான அனுபவம். எனினும் இப்போது முன்னேற்றம் உள்ளது. 2 மாத அறுவை சிகிச்சைக்குப் பிறகு, என்னை நேசிப்பவர்களுக்காகவும், எப்போதும் என்னை ஆதரிப்பவர்களுக்காகவும், என் வலியைப் புரிந்துகொண்டவர்களுக்காகவும் இந்தப் பதிவை இடுகிறேன்.
உங்கள் அனைவரிடமிருந்தும் இந்த நிபந்தனையற்ற அன்பைப் பெற நான் என்ன செய்தேன் என்று நினைத்து நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்காக பிரார்த்தனை செய்தவர்களும், வேலையில் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு பெரிய நன்றியை சொல்ல விரும்புகிறேன்.
அது தான் என்னை இந்த இருண்ட நாட்களைக் கடந்து வர உதவியது. இப்போது முன்னேற்றம் உள்ளதால், மீண்டும் வலுவாக வருவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று டிடி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு நடிகர்கள் ஜீவா, துல்கர் சல்மான், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ, ரேகா, ரித்விகா, வாணி போஜன், பாடகி சைந்தவி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அஞ்சனா ரங்கன், அனிதா சம்பத், அர்ச்சனா, குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி?
ஐபோன் 16 அறிமுகத்தால் ரூ.20,000 வரை விலை சரிந்த மற்ற ஐபோன்கள்!