2003 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சாயா சிங். முதல் படத்திலேயே அதிரடியாக நடனமாடி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் இவர்.
அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறாததால், இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் சாயா சிங் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடிக்கின்றார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சீரியல்களிலும் நடித்து உள்ளார்.
சாயா சிங்கின் கணவரின் பெயர் கிருஷ்ணா இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் தெய்வமகள் தொடரின் கதாநாயகன்.
இந்த நிலையில் சாயா சிங்கின் பெங்களூரு வீட்டில் நகை திருடு போயுள்ளது.
தற்போது ஒரு கன்னட படத்தில் சாயா சிங் நடித்து வருவதால் பெங்களூருவில் தனது அம்மா வீட்டில் தங்கி உள்ளார்.
அப்போதுதான் வீட்டில் தனது தங்க நகை திருடு போயிருப்பதை சாயா சிங் கண்டுபிடித்து இருக்கிறார்.
வீட்டிலிருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டு உள்ளதாக சாயா சிங் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணையை தொடங்கிய போலீசார் சாயா சிங் வீட்டில் வேலை செய்து வந்த உஷா என்ற பெண்ணை விசாரிக்க தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டை மறுத்த உஷா பின்னர் நகையை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் திருடப்பட்ட நகைகளும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகரிக்கும் டெங்கு: சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி மலச்சிக்கலைச் சந்திப்பவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா : கேரட் மில்க் ஷேக்!
உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!