அல்லு அர்ஜூனின் அலா வைகுந்தபுரம்லு, ஜூனியர் என்டிஆரின் அரவிந்த சமேத வீர ராகவா போன்ற மாஸ் ஆக்சன் படங்களை இயக்கியவர் பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாக உள்ள படம் குண்டூர் காரம்.
இந்த படத்தில் நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து ஶ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குண்டூர் காரம் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
குண்டூர் காரம் படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் சங்கராந்தி பாண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன், காமெடி, குடும்ப சென்டிமெண்ட், மாஸ் வசனங்கள் என ஒரு பக்கா மாஸ் மசாலா படமாக குண்டூர் காரம் படம் உருவாகியுள்ளது. தற்போது குண்டூர் காரம் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
பியூட்டி டிப்ஸ்: பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழிகள்!