தெலுங்கு சினிமாவில் பல மாஸ் ஆக்சன் வெற்றி படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். தற்போது இவரது இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் “குண்டூர் காரம்”.
இந்த படத்தில் நடிகர் மகேஷ்பாபு உடன் இணைந்து ஶ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குண்டூர் காரம் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் போஸ்டர்கள், புரோமோ மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 9) குண்டூர் காரம் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
A blistering coffee with a blissful melody ☕❤️
Swing to the most romantic number #OhMyBaby 💕💞#GunturKaaram 2nd Single ~ Promo out on 11th Dec at 04:05pm, full song out on Dec 13th! 🕺
A @MusicThaman Musical 🎹🥁
SUPER 🌟 @urstrulyMahesh #Trivikram #Thaman @sreeleela14… pic.twitter.com/QzWWiosYR5
— Haarika & Hassine Creations (@haarikahassine) December 9, 2023
“Oh my baby” என்று பெயரிடப்பட்டுள்ள செகண்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வரும் டிசம்பர் 11 ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என்றும், முழு பாடல் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டூர் காரம் படம் சங்கராந்தி பாண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
மீண்டும் ராஜன் ஆக அமீர்… மாயவலை டீசர் இதோ!