தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா காலமானார்!

சினிமா

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா இன்று (நவம்பர் 15) அதிகாலை காலமானார்.

80 வயதான மூத்த நடிகர் கிருஷ்ணா, நேற்று அதிகாலை 1.15 மணியளவில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவமனையில் கிருஷ்ணா காலமானார்.

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வந்த கிருஷ்ணா இதுவரை 325 படங்களில் நடித்துள்ளார்.

மேலும் வெற்றிகரமான இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராகவும் அவர் தெலுங்கு திரையுலகில் கொண்டாடப்பட்டார்.

இதன்காரணமாக கிருஷ்ணாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணா, 1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.

கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான இந்திரா தேவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார்.

இவரது மூத்த மகன் ரமேஷ் பாபு ஜனவரி மாதம் இறந்தார். இவரது இரண்டாவது மனைவியான நடிகை விஜய நிர்மலா 2019ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் தற்போது கிருஷ்ணாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது தெலுங்கு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

காலாவதியான கோவேக்சின் தடுப்பூசிகள் : தமிழக அரசு எடுத்த முடிவு!

ட்விட்டர், பேஸ்புக் வரிசையில் அமேசான்… ஊழியர்கள் கலக்கம்!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *