’மகாராஜா ‘ நித்திலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை ‘மகாராஜா’ படத்தின் படக்குழு பரிசளித்துள்ளது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனுராக் கஷ்யப், நட்டி நடராஜன், மம்தா மோகன் தாஸ், சஞ்சனா, சிங்கம் புலி, அருள் தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான திரைப்படம் ‘மகாராஜா’.
இந்தாண்டின் மாபெரும் வெற்றித்திரைப்படமான இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்குகள் மட்டும் இன்றி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகளாவிய வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இத்தகைய மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசளித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படம் ஒன்றை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, தனது தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
100 நாட்களாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ள ’மகாராஜா’ திரைப்படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள், அங்கீகாரங்கள் எனத் தொடர்ந்து பல பாராட்டுகள் வந்த வண்ணமே உள்ளது.
அடுத்ததாக நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நயன் தாரா நடிக்கும் ‘மகாராணி’ என்கிற திரைப்படம் உருவாகிறது என பல செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லையா? – ஆளுநருக்கு ரகுபதி பதிலடி!
கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி