ஓடிடியில் தூள் கிளப்பும் ‘மகாராஜா’

சினிமா

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 14 ஆம் தேதி வெளியான படம் மகாராஜா.

விஜய் சேதுபதி நடிப்பில் தயாரிக்கப்பட்ட 50-வது படமான மகாராஜா  ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த படங்களில் ரூ.100 கோடி மொத்த வசூலை கடந்த முதல் படமாகும் மகாராஜா.

இந்த படம் கடந்த ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே 3.2 மில்லியன் பார்வைகளையும், 7.5 மில்லியன் பார்வை நேரங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக இந்தி மொழியில் அதிகமானவர்கள் பார்த்து வருகின்றனர்.இதனால் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தொடர்ந்து இந்தியாவில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற படங்களில் மகாராஜா முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. அதே போல 14 நாடுகளில் ட்ரெண்டிங் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களான ‘லாப்பாட்டா லேடீஸ்’, ‘படே மியான் சோட்டே மியான்’ ஆகிய படங்களின் பார்வைகளை ‘மகாராஜா’ முறியடித்துள்ளது.

மேலும், உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட 4-வது ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையையும் ‘மகாராஜா’ பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வரும் படங்களின் ஓடிடி உரிமையை வாங்குவதற்கு ஓடிடி நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்க தொடங்கியுள்ளன.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய கிரிமினல் சட்டங்களில் குழப்பம்: மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சசிகலாவின் ஆடி டூர்…செல்லுபடியா? தள்ளுபடியா? தென்காசியை செலக்ட் பண்ணிய பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *