ஏகே 62 விலகிய விக்னேஷ் சிவன்: அடுத்த இயக்குனர் யார்?

சினிமா

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சினிமா வட்டாரத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படம் குறித்த பேச்சுக்கள் தான் அதிகமாக உலா வந்தன.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் கடந்த 2012-ஆம் ஆண்டு சிலம்பரசன் நடித்த போடா போடி என்ற திரைப்படத்தை இயக்கி சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

பின்னர் 2015-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடி தான் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள், காத்து வாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், கனக்ட் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.

ரொமாண்டிக் ஜானரில் படம் இயக்கும் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போவதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. ‘துணிவு’ படம் வெளிவந்த பின் உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

magizh thirumeni director ak 62 movie

இதற்காக நடிகர் சந்தானம், அரவிந்த்சாமி உள்ளிட்டோரிடம் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

விக்னேஷ் சிவன் அஜித்திடம் சொன்ன கதையில் அவர் சில மாற்றங்களை செய்ய கூறியுள்ளார். திரைக்கதையில் விக்னேஷ் சிவன் மாற்றம் செய்த பிறகும் அஜித்திற்கு கதையில் திருப்தி இல்லையாம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்திற்கு டஃப் கொடுக்க அஜித் நினைக்கிறாராம். இதனால் இயக்குநர்கள் மகிழ் திருமேனி மற்றும் விஷ்ணுவர்தனிடம் அஜித் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கடந்த இரு வாரங்களாக ஏகே 62 படம் சமூக வலைதளங்களில் பிரதான பேசுபொருளாக இடம்பெற்றது. குறிப்பாக படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாகவும் அவருக்குப் பதிலாக மகிழ்திருமேனி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

magizh thirumeni director ak 62 movie

லண்டனில் உள்ள லைகா அலுவலகத்தில் அதன் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுடன் அஜித்குமார்,விக்னேஷ் சிவன் இருவரும் தனி தனியாக பேச்சு வார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. ஆனால் படத்தை தயாரிக்கப்போகும் லைகா, நாயகன் அஜித்குமார், இயக்குநர் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எந்தவிதமான தகவலும், அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து ‘ஏகே 62’ என்ற வார்த்தையை நீக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். மேலும், தனது புரொபைலில் வைத்திருந்த அஜித்குமார் படத்தையும் மாற்றியுள்ளார்.

‘ஏகே 62’ என்பதை நீக்கிவிட்டு தற்போது ‘விக்கி 6’ என்று சேர்த்துள்ளார். இதன் மூலம் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது உறுதி ஆகியுள்ளது.

magizh thirumeni director ak 62 movie

தனது புரொபைலில், “ஒருபோதும் கைவிடாதே…நீங்கள் உண்மையில் செய்ய விரும்புவதைச் செய்ய முயற்சிக்கிறீர்கள்…அன்பும் உத்வேகமும் இருக்கும் இடத்தில் நீங்கள் தவறாகப் போக முடியாது,” என்ற வாசகத்தை புதிதாக சேர்த்துள்ளார்.

இதன் மூலம் ஏகே62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளார் என்பதை சமூக வலைதளம் மூலம் குறிப்பால் உணர்த்தியுள்ளார். இனி ஏகே62 படத்தை இயக்கப்போவது யார் என்பதை லைகா நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஏகே 62 படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து விலகியுள்ளது சமூக வலைதளங்களில் மிக முக்கியமான பேசுபொருளாக இருந்து வருகிறது.

செல்வம்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *