தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் நட்சத்திர நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதையும் கடந்து தாங்கள் இயக்கிய திரைப்படங்களின் வெற்றி காரணமாக நடிகர்களும், இயக்குனர்களை தேடிப்போவதும் நடக்கிறது.
நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றதால் அப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹரை தேடி பல வாய்ப்புகள் வந்தன. அப்படி வந்த வாய்ப்புகளில் அவருடைய தேர்வாக இருந்தவர் நடிகர் மாதவன்.
அடுத்த படம் மாதவனுடன் தான் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதிசெய்யும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இயக்குநர் மித்ரன் ஜவகரை ஓரங்கட்டி எல்லா விஷயங்களிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை கையகப்படுத்தும் வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டாராம் மாதவன்.
முதலில் மித்ரன் ஜவகர் சொன்ன கதையை நிராகரித்திருக்கிறார். வேறுகதை சொல்வதற்கும் இடம் கொடுக்காமல் அவரே எழுத்தாளர் ஜெயமோகனைத் தொடர்புகொண்டு பேசி அவருடைய கதையைப் படமாக்கலாம் என்று முடிவாகச் சொல்லிவிட்டாராம்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்ற நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்வதிலும் மாதவனின் தலையீடு அதிகரித்திருக்கிறதாம். பெரிய நிறுவனம், நல்ல சம்பளம் ஆகிய காரணங்களால் மாதவனை வைத்துப் படம் இயக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவகர்.
அதேசமயம் தமிழில்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் மாதவனை நாயகனாக ஒப்பந்தம் செய்தால் அவரது ஆட்டம் அதிகமாக இருக்கிறது என்கின்றனர் இயக்குநர்கள் வட்டாரத்தில்.
இராமானுஜம்
ஜனாதிபதி வருகை: பாதுகாப்பு வளையத்தில் கோயமுத்தூர்!
அதானி நிறுவன பங்கு மோசடி: விசாரணைக்கு குழு அமைக்க உச்சநீதிமன்றம் முடிவு!