YNOT ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் டெஸ்ட் படத்தின் அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 12) மாலை வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகிறது. இதில் மாதவன், சித்தார்த் , நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
அந்த வகையில் மாதவனும், நயன்தாராவும் முதன்முறையாக இப்போது தான் இணைந்து நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார்.
இவர் ஏற்கனவே இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதி சுற்று’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ். சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். தனது 23 வது தயாரிப்பான ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் நடிப்பது பற்றி மாதவன் கூறுகிறபோது, “சஷி இயக்குநராக அறிமுகமாவதில் மிகுந்த மகிழ்ச்சி.
கட்டிட வடிவமைப்பு கலைஞராக இருந்து வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பாளராக மாறிய அவர், இப்போது இயக்குநராகவும் மாற்றம் கண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
‘இறுதி சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு YNOT உடனான எனது மூன்றாவது படமான ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
எஸ். சஷிகாந்த் கூறுகையில், “ஒரு கட்டிடக் கலைஞராக இருந்து தயாரிப்பாளராக மாறியதால், கதை சொல்லும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன்.
இந்தத் துறையில் உள்ள திறமையான திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றும் அதிர்ஷ்டம் பல ஆண்டுகளாக எனக்கு கிடைத்து வருகிறது. அவர்களது அர்ப்பணிப்பு நிலையான உத்வேகமாக எனக்கு இருந்து வருகிறது.
இப்போது ஒரு இயக்குநராக எனது புதிய அத்தியாயத்தை தொடங்கும் போது, எனது கண்ணோட்டத்தை திரையில் கொண்டு வரவும், பார்வையாளர்களை சென்றடையும் கதைகளை கூறவும் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.
இயக்குநராக நான் அறிமுகமாகும் படத்தில் அசாதாரண திறமை கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளனர். அவர்களின் ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
சென்னை மற்றும் பெங்களூரில் ஜூலை 2023 வரை படப்பிடிப்பு நடைபெறும். 2024 கோடை காலத்தில் உலகளவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.
இராமானுஜம்
10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் விளக்கம்!
6 மாத சிறை… சட்டரீதியாக சந்திப்பேன்: இயக்குநர் லிங்குசாமி
ஆருத்ரா மோசடி நபர்களுடன் பாஜக தலைமை: நிர்மல் வழியில் அண்ணாமலை மீது இன்னொரு புகார்!