மாயவன் படத்தின் பார்ட் 2 டைட்டில் இது தானா?
2017 ஆம் ஆண்டு சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான sci fi திரில்லர் படம் மாயவன். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சி.வி. குமார் மாயவன் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார்.
https://twitter.com/icvkumar/status/1733386028164268361
மாயவன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக சில ஆண்டுகளுக்கு முன் சி.வி. குமார் தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சி.வி. குமார் இயக்கத்தில் உருவாகும் மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மாய ஒன் (MAAYA ONE) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாய ஒன் (MAAYA ONE) படத்திலும் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏ.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டதா? – மெகபூபா முப்தி காட்டம்!
ஜம்மு காஷ்மீருக்கு தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு!