மாமன்னன் திரைப்படம் பல நல்ல விஷயங்கள் நடப்பதற்கு தொடக்கமாக இருக்கும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசி திரைப்படமாக கருதப்படும் மாமன்னன் திரைப்படம் பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இன்று(ஜூன் 29) வெளியாகியுள்ளது.
அரசியலில் நிலவும் சாதிக் கொடுமைகள் குறித்து பேசும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தினை சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கில் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துகள். மாரி செல்வராஜ் நினைத்த மாதிரியே படம் எடுத்துவிட்டார். அவர் சொல்ல வந்த விஷயத்தை இந்த படத்தின் மூலம் சிறப்பாக சொல்லிவிட்டார்.
உதயநிதி, ஏ.ஆர்.ரகுமான், வடிவேலு, பகத் உட்பட படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் நன்றி.
இந்த படம் பல நல்ல விஷயங்கள் நடப்பதற்கு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
‘இனி வாய்ப்பில்ல ராஜா’ : மாமன்னன் பார்த்தபின் உதயநிதி முடிவு!
மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்: தலைவர்கள் கண்டனம்!