பொன்னியின் செல்வன் படத்தின்பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ளது.
உலகளவில் இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார்.
அதன் முதல் பாகம் அடுத்த மாதம் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
ஜெயம்ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாவது பாடல் வெளியாகி சமூகவலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்திருந்தது.
அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு படத்தின் டிரைலர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
’வருகிறான் சோழன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள போஸ்டரில் பாடல் மற்றும் டிரைலர் வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் செப்டம்பர் 6ம் தேதி நடைபெறுகிறது என தயாரிப்பு நிறுவனம் லைக்கா அறிவித்திருக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் பொன்னியின் செல்வன்