நாளை முக்கிய தகவல் வெளியாகும் என முன்னணி தயாரிப்பு நிறுவனமான ’லைகா’ அறிவித்துள்ளதை தொடர்ந்து, ’ஏகே 62’ படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என அஜித் ரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே, ’ஏகே 62’ படத்தின் பூஜை கடந்த வாரம் மிகவும் எளிமையாக போடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், லைகா நிறுவனம் நாளை(மார்ச் 2 ) காலை 10:30 மணிக்கு முக்கிய தகவல் வெளியாகும் என தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.
எனவே நாளை வெளியாக உள்ள அறிவிப்பு ’ஏகே 62’ படத்தின் தகவலாக இருக்கலாம் என கணித்துள்ள அஜித் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன், இயக்க இருந்த நிலையில் பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார்.
இதை தொடர்ந்து தற்போது இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதுவரை இயக்குனர் குறித்த தகவலை கூட தயாரிப்பு நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், நாளை இயக்குனர் மற்றும் படத்தின் டைட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன? ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்
தேசிய மகளிர் தினம்: ஒரே ஒரு நாள் தமிழ்நாட்டைப் பின்பற்றும் ராஜஸ்தான்