இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து இந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடத்தும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
விமர்சன ரீதியாகவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தத் திரைப்படம் பிறகு மக்களின் வரவேற்பால் காட்சிகள் பின்னால் கூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் இந்தப் படத்தின் வசூல் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரிலீஸாகி 15 நாட்களே ஆன இந்தத் திரைப்படம் உலகெங்கும் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சித்தாரா எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் ராம்கி, மீனாக்ஷி சவுத்ரி, சூர்யா ஸ்ரீநிவாஸ், சாய் குமார் உட்பட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, நவீன் நூலி படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டார். நடிகர் துலகர் சல்மான் நடித்து தெலுங்கில் வெளியான ’மகாநடி’ , ‘சீதா ராமம்’, ‘லக்கி பாஸ்கர்’ எனத் தொடர்ந்து மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!