‘லவ்வர்’ படம் எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!

Published On:

| By Manjula

Lover Movie Twitter Review

‘குட்நைட்’ படத்தை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் இன்று (பிப்ரவரி 9) வெளியாகி இருக்கும் படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டனுடன் இணைந்து ஸ்ரீகௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். Lover Movie Twitter Review

பிரபுராம் வியாஸ் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் இப்படத்தை, மில்லியன் டாலர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் மணிகண்டனின் ‘லவ்வர்’ ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதைக் கீழே பார்க்கலாம்.

விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ், ”உண்மையான மற்றும் பொருத்தமான கதாபாத்திரங்கள். மணிகண்டன், கௌரி இருவரும் நன்றாக நடித்துள்ளனர். முதல் பாதி நன்றாக இருக்கிறது. 2-வது பாதி சுமார் தான். நல்ல இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ். பார்க்கலாம்,” என தெரிவித்து உள்ளார்.

அபி ஆதித்யா அன்பழகன் என்னும் ரசிகர், ”முதல் பாதி நன்றாக இருக்கிறது. 2024-ம் ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும். மணிகண்டன், கௌரி நடிப்பு நன்றாக உள்ளது”, என பாராட்டி இருக்கிறார்.

சுவாதி என்னும் ரசிகை,” உண்மையான ரொமாண்டிக் படம். இந்த படம் காதலில் சொதப்புவது எப்படி படத்தை ஞாபகப்படுத்துகிறது. மணிகண்டன், கௌரி இருவரும் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மொத்தத்தில் நான் 3/5 வழங்குவேன்,” என விமர்சனம் செய்திருக்கிறார்.

https://twitter.com/Swathi_Prasad96/status/1755847318782509536

ரசிகர் கௌதம் ராஜ் காந்தி, ”இன்றைய காதலர்களின் யதார்த்த நிலைமையை ‘லவ்வர்’ எடுத்துக் காட்டுகிறது. படத்தின் முதல் பாதி புல்லட் போல உள்ளது,” என பாராட்டி இருக்கிறார்.

அன்பு செய்வோம் என்ற பெயரில் ரசிகர் ஒருவர்,” படத்தில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். பின்னணி இசை சிறப்பு. முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி ஆவரேஜாக உள்ளது. நல்ல இடைவேளை. பொருத்தமான கிளைமேக்ஸ். மொத்தத்தில் ‘லவ்வர்’ வின்னர்,” என ரசனையுடன் தெரிவித்து உள்ளார்.

https://twitter.com/Blink_Blng_/status/1755856222262038970

மேலே சொன்ன விமர்சனங்களை வைத்து பார்க்கும்போது இளைஞர்களை, குறிப்பாக ‘2கே’ கிட்ஸ்களை இப்படம் நன்றாக கவர்ந்து இழுக்கும் என்பது தெரிகிறது.

மொத்தத்தில் ‘லவ்வர்’ காதலர்களுக்கானது!

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொளுத்தும் வெயில் : 3வது நாளாக சதமடித்த ஈரோடு!

”யோகிபாபுவும், நானும் ட்வின்ஸ் மாதிரி” : ஜெயம் ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share